திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள காந்தி மார்க்கெட் ரோடு பகுதியில் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் ஜெமினி பேருந்துநிலையம் அருகே கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்க்கு கழிவு நீர் நீரோடை போல் நெடுஞ்சாலையில் ஓடுகிறது.
கழிவுநீர் கலந்து செல்வதால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க ஆரணி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.