நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றிய “சூப்பர் மாம்” 

392
Advertisement

ஒரு குழந்தை உடனான தாயின் பிணைப்பு மற்றவர்கள் கண்களால் மட்டுமே காணமுடியும் அதை உணரமுடியாது.தாயாக இருந்து மட்டுமே அதை உணர முடியும்.குழந்தை எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள்.

அவர்களை பாதுகாப்பதே தாய்மார்களின் முதல் வேலையாக இருக்கும்.தந்தை கூட குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் முழு நேரத்தை செலவிடுவது இயலாத ஒன்று.ஆனால் தாய் தன் குழந்தையை விட்டு  கொடுக்கமாட்டாள்.

குழந்தையின் ஒவொரு அசைவுகளை  தாய் அறிவாள்.இதனை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ட்விட்டர் பக்கத்தின் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்தின் அருகில் நின்றுகொண்டு இருக்கிறான். தண்ணீரை பார்த்தபடி இருந்த அந்த சிறுவன், சட்டெனெ  நீச்சல் குளத்தில் குதித்துவிட்டான்.

சிறுவன் முழுமையாக தண்ணீரில் மூழ்கும் முன்,அதாவது நொடி பொழுதில் ,தன் குழந்தை குதிக்கப்போகிறான் என உணர்ந்த சிறுவனின் தாய்,மின்னல் போல வந்த சிறுவனின் ஆடையை பிடித்து வெளியே தூக்கிவிடுகிறார்.

இவை அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.‘Mother of the year!’ என தலைப்புடன் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.