ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற தாய்

288
Advertisement

ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், நான்கு
குழந்தைகள் பெற்றாலே அதிசயமாகிவிடும்.

தற்போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிராமப்
பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப்
பெற்றதன்மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள்
பெற்றெடுத்துள்ள இந்தத் தாயின் பெயர்
கோசியாமே தமாரா.

37 வயதான இவருக்கு ஏற்கெனவே 6 வயதில்
இரட்டைக் குழந்தைகள் உள்ளன. தற்போது
தாயும் சேய்களும் நலமாக இருப்பதாக
அவரின் கணவர் டெபோகோ சொடேட்ஸி
தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதி தற்போது கின்னஸ் சாதனைப்
புத்தகத்தில் இடம்பெற உள்ளனர். இதற்குமுன்
மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் 2021 ஆம்
ஆண்டு, மே மாதம் 9 குழந்தைகள் பெற்றெடுத்ததே
உலக சாதனையாக இருந்தது.

கர்ப்பமாக இருந்தபோது இடுப்பிலும் கால்களிலும்
கடுமையான வலி இருந்ததாக இந்த சாதனைத் தாய்
மகிழ்ச்சி கலந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
இவரின் கணவரோ மகிழ்ச்சியோடு இருப்பதாக
உணர்ச்சிப் பெருக்கோடு கூறுகிறார்.