ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், தனக்குத்தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொண்டதால் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் – ஜோதி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன குழந்தை பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.