Saturday, August 16, 2025
HTML tutorial

திருச்செந்தூர் கடலில் நீராடிய 10 க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர். இதற்கிடையில் கடலில் திடீரென ஏற்பட்ட அலையில் பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை போராடி மீட்டனர்.

இதில் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி காலில் காயம் ஏற்பட்டது. அதே போல் சாத்தூரைச் சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவிலில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News