ஸ்டைலாக Sunscreen போட்டுக்கொள்ளும் தவளை

44
Advertisement

தென் அமெரிக்காவின் சாகோ (Chaco) வனப் பகுதியில் Waxy Monkey Tree Frog எனும் பெரிய வகை தவளைகள் காணப்படுகின்றன.

தவளை போல் தவ்வுவது மட்டுமில்லாமல், நடக்கவும் முடியும் என்பதால் monkey frog என்ற பெயரை பெற்றுள்ளது.

மணிக்கணக்கில் மரத்தின் மீது வெயிலில் தூங்கும் இந்த தவளையின் தோலை ஈரப்பதத்துடன் பாதுகாக்க, அதன் உடலில் இருந்தே ஒரு திரவம் சுரக்கிறது.

Advertisement

பெரும்பாலான தவளைகளால் சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்க முடியாத நிலையில், monkey frog வெயிலில் சுற்ற காரணம், அதற்கு இயற்கையாக கிடைக்கும் sunscreen தான் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், தன்னிடம் சுரக்கும் sunscreen திரவத்தை, monkey frog உடல் முழுவதும் நேர்த்தியாக தடவி கொள்வது கூடுதல் சுவாரஸ்யம்.