கரை புரண்டோடும் வெள்ளத்தைக் கடந்து மறுகரைக்குச்
செல்ல கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊஞ்சல் வடிவிலான படகு
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளம் கரை புரண்டோடும் நேரங்களில் ஆற்றைக்
கடப்பதற்குக் கயிற்றால் கட்டப்பட்ட தொங்குபாலத்தைப்
பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அதேபோல,
பலகைகளைத் தரைபோல அமைத்துக் கயிற்றால்
கட்டப்பட்ட பாலங்களும் உள்ளன. பக்கவாட்டில் சிறிய
சுவர்போல கட்டப்பட்டிருக்கும் கயிறைக் கைகளால்
பிடித்துக்கொண்டு நடந்துசெல்லும்போது மேலும் கீழும்
அசையும்போது சிறிது அச்சத்துடனேயே கடந்துசெல்வோம்.
இத்தகைய பாலங்களைக் கேரளாவின் பல பகுதிகளிலும்
வடமாநிலங்களிலும் காணமுடியும்.
ஆனால், மரக்கட்டிலில் அமர்ந்திருப்பதுபோல உட்கார்ந்துகொண்டு
பயமில்லாமல் ஆற்றைக் கடந்துவிடக்கூடிய நவீன ஊஞ்சல் ஒன்று
மிசோராம் மாநிலத்தில் உள்ளது.
ஆற்றின் இருகரைக்கும் நடுவில் உயரத்தில் ரயில் தண்டவாளம்போல்
கட்டப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் பிணைக்கப்பட்டுள்ளது இதன்மீது.
வழுக்கிக்கொண்டே செல்லும் வகையில் இந்த நவீன சாதனம்
உருவாக்கப்பட்டுளளது.
சைக்கிளைக் கால் பெடல்களால் மிதித்து ஓட்டுவதுபோல், கைப்பெடல்களால்
இயக்கினால் இந்த ஊஞ்சல் சர்ரென்று விரைந்துசெல்கிறது.
இதில் அமர்ந்து ஆற்றைக் கடப்பது ஊஞ்சலாடுவதுபோல உள்ளது.
இனி, ஊஞ்சலில் அமர்ந்திருப்பதுபோன்ற மனநிறைவுடன்
கரைபுரண்டோடும் வெள்ளத்தை ரசித்தபடியே மறுகரைக்குச்
சில நிமிடங்களில் சென்றுவிடலாம்.
உலகத்திலுள்ள எல்லா விஞ்ஞானிகளும் நம்ம நாட்லதான்பிறந்திருப்பாங்களோ…