நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்க -பார்வையாளர்

288
Advertisement

நாம் அன்றாடம் உடுத்தும் உடை முதல் விசேஷ நிகழ்வுகளுக்கு உடுத்தும் உடை வரை விதவிதமான வெவ்வேறு ஆடைகள் தற்போது மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. பாரம்பர்யத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து விதவிதமான ஆடைகள் வடிவமைப்பதில்,ஆடை வடிவமைப்பாளர்கள் தனித்தன்மைவாய்ந்தவர்கள்.

அதுபோன்ற ஆடைகளை காட்சிப்படுத்துவதற்காக ஆடை வடிவமைப்பாளரால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தான் பேஷன் ஷோ . ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் புதிய வடிவமைப்புகளை , மாடலிங் துறையில் உள்ள பெண்களுக்கு அணிவித்து , அவர்கள் நீளமான மேடையில் உயரமாக பார்ப்பவர்களை கவரும் விதம் நடப்பார்கள். இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.

ஃபேஷன் ஷோக்கள் ஒவ்வொரு சீசனிலும், குறிப்பாக வசந்த/கோடை மற்றும் இலையுதிர்/குளிர்கால பருவங்களில் நடத்தப்படும் .இதுபோன்று ஒரு நிகழ்ச்சியில் மாடல் ஒருவர் பார்வையாளாரை தனது கோட்டால் அடிக்கும் அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

நியூ யார்க் மாகாணத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான கிறிஸ்டன் கோவனின் நிகழ்ச்சியில் , இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாடல் யார் என்று தெரியாதிருந்த நிலையில் ,அவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் தியோடோரா “டெடி” குயின்லிவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நடை மேடையில் உயரமாக பூனை நடைபோட்டு நடந்துவரும் பொழுது ,திடிர்யென பார்வையாளர் ஒருவரை தன் கையில் வைத்திருந்த கோட்டால் அடித்துவிட்டு மீண்டும் நடைப்போடிக்கிறார். ஏன் அப்படி செய்தார் என தெரியாத நிலையில் , பலரும் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் இந்த சம்பவம் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க கூடும் என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களோ , அடிவாங்குன நபர் “நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்க டா ” என்பது போல பீல் பன்னிருப்பாருனு நினைத்துருப்பார்கள் போல உள்ளது.