Friday, August 22, 2025
HTML tutorial

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தினத்தை ஒட்டி, அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு சென்னை நம்பிக்கையை அளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பல பெண்களுக்குப் பறக்க சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு. வணக்கம் வாழவைக்கும் சென்னை என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News