ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம்தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், அவரது 700-வது சர்வதேச விக்கெட்டினை வீழ்த்தி சாதனை படைத்தார். குறிப்பாக, அவரது 35வது பிறந்த நாளில் இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.