Saturday, April 26, 2025

“அண்ணாமலையை பளார்…பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்” – சேகர் பாபு பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லை என குற்றம்சாட்டினார். இந்நிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் : அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். டெல்லி சென்ற அண்ணாமலையை பளார்… பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள். இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.

வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம் என அவர் பேசியுள்ளார்.

Latest news