Friday, January 24, 2025

“அமைதியோ அமைதி” என எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சை கண்டிக்காமல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார் என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா? என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

Latest news