அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உயிர் காக்கும் சேவையாக ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று பழமொழி கூறுவார்கள். அது போல எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?
அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசின் மருத்துவ சேவையை குறை கூறி பேசும் அவரது செயல் தனது தரத்தை குறைத்துக் கொள்ளும் செயல் என அவர் கூறினார்.