Thursday, May 8, 2025

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால்….எச்சரித்த அமைச்சர் ஜெய்சங்கர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது : பதற்றத்தை அதிகரிக்கும் சூழல் எங்களது நோக்கம் கிடையாது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார்.

Latest news