திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் திமுகவில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.