மால டம் டம்…மங்கள டம் டம்…மகிழ்ச்சியில் மீனா!

50
Advertisement

கணவர் வித்யாசாகரின் இறப்புக்கு பிறகு படங்கள் எதிலும் கமிட் ஆகாத மீனா, நண்பர்களுடன் செய்யும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அண்மையில், சங்கவியுடன் இணைந்து மீனா, விஷால் நடிப்பில் வெளிவந்த ‘enemy’ படத்தில் இடம்பெற்ற ‘மாலை டம் டம் மஞ்சரை டம் டம் மாத்து அடிக்க மங்கள டம் டம்’ பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார்.

90களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த இரு நடிகைகள், இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை சங்கவி ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ ‘விஷ்ணு’ மற்றும் ‘ரசிகன்’ என அடுத்தடுத்து விஜய் படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement