அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்று மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில், முதல்வர் மருந்தகத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொடுங்கையூரில் மூன்று தலைமுறையாக, கந்தல் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த 128 பேருக்க்கு, தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.