எனக்கு விஜய் தான் பிடிக்கும்! மேயர் பிரியா ஓபன் டாக்

388
Advertisement

முதலமைச்சர் காரில் footboard அடித்த சர்ச்சை சற்றே ஓய, மேயர் பிரியாவின் சுவாரஸ்யமான நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல கேள்விகளுக்கு நேர்மறையாக பதில் அளித்துள்ளார் பிரியா.

பதவிக்கு வந்த ஒன்பதே மாதங்களில், இரு பெரும் மழை சூழலை சமாளித்தது மிகவும் சவால் நிறைந்த அனுபவமாக இருந்ததாகாகவும், அமைச்சர்களின் உதவியுடன் நிலைமையை சிறப்பாக கையாண்டதாகவும் கூறியுள்ளார்.

தனது ஐந்து வயது குழந்தையை கணவர் தான் பார்த்துக்கொள்வதாகவும் தினமும் ஒன்பது மணிக்கு மேல் தான் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடிவதாகவும் பகிர்ந்துள்ளார்.

மேலும், பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் எதை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வாரிசு படம் தான். எனக்கு விஜய் தான் பிடிக்கும் என கூறியது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.