மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண் !

285
Advertisement

இந்தியாவில் திருமணங்கள் மிகவும்  உணர்வுப் பூர்வமானது. இதனால் திருமணங்களில் பல  எதிர்பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் சமீபத்தில் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல திருமணங்கள் கடைசி நேரத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன.
 

இந்நிலையில் இணையத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் என்றால் முதலில் மணமக்களின் சம்மதம் வேண்டும்.இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் ஏற்ற துணையாக இருப்பார்/இருபால்  என்ற  எண்ணம் வரவேண்டும் என  பல பொருத்தங்களைப் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள்.  
 

சில நேரங்களில் , பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளும் உள்ளனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவரை  கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமண மேடையில் நடந்ததோ வேறு.
 
திருமண மேடையில் , மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டுள்ளனர். ஆனால் மணப்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை. சில நிமிடத்தில் மணமக்கள் மாலையை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் சடங்கு தொடங்கியது.ஆனால் அந்த பெண் தன் கையில் இருந்த பூ மாலையை எதிரே நின்றுகொண்டிருந்த  மணமகனின் கையில் இருந்த மாலையின் மீது போட்டுவிட்டார்.
 
 

மணமகனை மணக்க மாட்டேன் என்று மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் ,“கடவுளே அவள் என்ன சொல்கிறாள்?” என குழம்பிப்போக, மணப்பெண் மேடையை விட்டு வெளியேற முயல்கிறாள், ஆனால் அவள் தாய்  தடுக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணும் மணமகன் பின்னர் மேடையை விட்டு வெளியேறுகிறார்.
 
மணப்பெண்ணின் தாய் மணமகனை   நிறுத்தி, திரும்பி வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் .மணமகனின் தாயும் அவரை மேடையை நோக்கித் தள்ளுகிறார். பெற்றோர் ,  இருவரையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய முயல்கிறார்கள், ஆனால் மணமகள் தலையை அசைத்து அவளால் அதைச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்  கேமராக்களை ஆணித்துவிடவும் எனக் கூறும்போது  இந்த வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.