பலாப்பழம் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலி கான்! வைரலாகும் வீடியோ

215
Advertisement

திடீரென அரசியலில் குதித்து சட்னி அரைத்து, வெங்காயம் விற்று வாக்கு சேகரித்தது, தடுப்பூசியை பற்றி சர்ச்சையை கிளப்பியது என எப்போதும் விநோதமாக எதையாவது செய்து கவனம் ஈர்ப்பதில் பெயர் போனவர் மன்சூர் அலி கான்.

தற்போது பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் மன்சூர்.

கலப்படமான கேக்குகளை கைவிட்டு இயற்கை வாழ்க்கைக்கு திரும்புவோம் என குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பலாப்பழம் வெட்டி பரிமாறும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.