Monday, January 20, 2025

மன்மோகன் சிங் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல்

மன்மோகன் சிங், பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ‘கஹ்’ என்ற கிராமத்தில் 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அன்று பிறந்தார்.

ஆக்ஸ்ஃபோர்டில் முனைவர் படிப்பை முடித்த பிறகு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக பணிபுரிந்தார்.

1971ம் ஆண்டு அவர் இந்திய அரசின் வர்த்தகத்துறையில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். 1972ம் ஆண்டு அவர் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமர் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

2004 ல் பிரதமராக பதவியேற்பதற்கு முன், 1998 முதல் 2004 வரை ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார்.

இந்தியாவின் 13வது பிரதமராக 2004ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8% ஆக உயர்ந்தது.

உலகமே பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவித்த போது இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து மீட்ட பெருமைக்குரியவர் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங் இந்திய வரலாற்றில் 2004 இல் பிரதமரான முதல் சீக்கியர் ஆவார். ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு இரண்டாவது முறையாக தொடர்ந்து பிரதமரானது மன் மோகன் சிங்தான்.

நீண்ட காலம் அரசியல் பதவியில் இருந்தாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், விமர்சனங்கள் எதையும் வெளிப்படுத்தாதவர் மன்மோகன் சிங்.

Latest news