பத்து Partஆக வெளிவரும்  பொன்னியின் செல்வன்?

258
Advertisement

1950களில் பெரும்பாலான தமிழ் மக்களின் கைகளில் தவழ்ந்த பொன்னியின் செல்வன், தற்போது திரைப்பட உருவில் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.

2200 பக்கங்கள் கொண்ட கதையை எப்படி ஒரு படமாக எடுக்க முடியும் என்ற கேள்விக்கு மணி ரத்னம் ஏற்கனவே பதில் அளித்து விட்டார். புதினத்தில் அதிகமான கதாபாத்திரங்களும், கதை சூழல்களும் இருப்பதால் சுலபமாக பத்து பாகங்கள் வரை படமாக எடுக்க முடியும் என மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.

எனினும், இப்போதைய திட்டத்தின் படி இரண்டு பாகங்கள் எடுப்பது மட்டுமே உறுதியாகி உள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.