உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் மாம்பழம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், லாரியில் இருந்த மாம்பழங்கள் எல்லாம் சாலையில் சிதறிக் கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் சிலர் கீழே சிதறிக்கிடந்த மாம்பழத்தை மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, மாம்பழங்களை அள்ளி சென்ற பொதுமக்களை அப்புறப்படுத்தி, அதன்பின் பாலத்தில் போக்குவரத்தை சரி செய்தனர்.