Friday, April 18, 2025

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது. இதில் வணிக வகுப்பில் பயணம் செய்த துஷார் மசந்த் என்ற பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

குடிபோதையில் இருந்த அவர் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பிறகு பாங்காக்கில் விமானம் தரையிறங்கியதும் அது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தன் தவறுக்காக துஷார் மசந்த், சக பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.

Latest news