Friday, June 13, 2025

முதலீட்டாளர்களை ஏமாற்றி, பணமோசடி செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை

கரூரில் 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி, பணமோசடி செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், சேலம் பைபாஸ் ரோடு அருகில், வணிக வளாகத்தில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்த 113 பேரிடம், 3 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 734 ரூபாயை திருப்பி தராமல், உரிமையாளர் தமிழ்வாணன் என்பவர் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மதுரை முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தமிழ்வாணனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news