இந்தியாவில் UPI மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளின் பயன்பாடு, நினைத்துப்பார்க்க முடியாத அளவில் அதிகரித்திருக்கிறது. கையில் காசு இல்லாத நேரத்திலும், அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப தற்போது ஆன்லைனிலேயே பணம் செலுத்துவது என்பது வாடிக்கையாகி வருகிறது. தற்போது, அப்படி ஆன்லைனில் பணம் செலுத்திய ஒருவருக்கு நடந்த சம்பவம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் சுபம் என்பவர் CEO வாக இருக்கிறார். இவர், அலுவலகம் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்திருக்கிறார். ஆட்டோவை விட்டு இறங்கிய பின்பு, போகும் அவசரத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தி விட்டு சென்றிருக்கிறார். தன் நிறுவனத்திற்கு வந்திருக்கும் சர்வதேச வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க தாமதம் ஆகி விட்டதால் அவர் அவசரமாக சென்றிருக்கிறார்.அந்த மீட்டிங் மிகவும் மோசமாக சென்றிருக்கிறது. இந்த Client பிடிப்பதற்காக இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் பரிபோக மீட்டிங் முடிந்த பின்பு, சோகமான மனதுடன் கீழே வந்திருக்கிறார்.
அப்போது இவரை ஆட்டோவில் இறக்கி விட்ட ஆட்டோ டிரைவர் , இவரை எங்கு ட்ராப் செய்தாரோ அங்கேயே நின்று இவருக்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார். தன்னை பார்த்தவுடன் தன்னிடம் வந்த ஆட்டோ ட்ரைவர், தனக்கு அதிகமாக காசு கொடுத்து விட்டதாக கூறி, சுபம் அனுப்பிய ரூ.15,682-யும் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் ஹைலைட் என்னவென்றால், எக்ஸ்ட்ராவாக அனுப்பிய காசு மட்டுமல்லாமல், மொத்த காசையும் கொடுத்திருக்கிறார். ஆட்டோவிற்கான பணத்தையாவது வாங்கிக்கொள்ளுங்கள் என திரும்ப கொடுத்தாலும், அதனை வாங்க அவர் மறுத்திருக்கிறார். எவ்வளவோ கூறியும், அவர் தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.மேலும் இந்த 156 ரூபாயையாவது வைத்துக்கொள்ளுங்கள் இது உங்கள் பணம்தான் என்று சொல்லி அந்த காசை சுபம் கொடுக்க முயற்சித்த போது, இது நம் இருவருடைய நாளின் தொடக்கம் தான் சார் என்று சொல்லிவிட்டு திரும்ப சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த 7 நாட்களுக்கு பிறகு, கையை விட்டு நழுவிப்போன அந்த Client திரும்பி போன் செய்து , தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்ததாக தனது பதிவில் சுபம் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தை கேட்டவுடன், அன்று காலை நடந்த சம்பவம் தனக்கு நினைவுக்கு வந்ததாக கூறிய அவர், தன்னை அவ்வளவு வொர்ஸ்ட் ஆன ஒரு காலையில் பார்த்து, தன்னிடம் கணிவாக நடந்து கொண்ட அந்த நபருக்கு ரூ.500 அனுப்பியதாக கூறியிருக்கிறார். இதை நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு அனுப்பியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்
