எந்த சுவர் எப்ப விழுமோ என்று கூட யோசித்திருப்போம். ஆனால், கீழே இருக்கும் concrete நடைபாதை நொறுங்கி விழும் என நினைத்து கொண்டு யாரும் நடப்பதில்லை. இந்த நபரும் அப்படித்தான்.
யதார்த்தமாக நடந்து போய் கொண்டிருக்கும் போது விழுந்த நடைபாதையால் ஏற்பட்ட பள்ளத்தில் விழாமல் நூலிழையில் தப்பித்து விட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நல்ல வேளை, விழவில்லை என்றும் அவர் நடந்த பின் தானே உடைந்தது அப்ப அவர் தான் பொறுப்பு என நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.