சென்னையை அடுத்த மதுரவாயலில் டீக்கடை வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கபிலன் நகர் பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவர் தனது காரை மதுரவாயல் ஏரி கரை பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நிறுத்திவிட்டு டீ குடித்துள்ளார். காரை நிறுத்திவிட்டு செல்லும்போது சாவியை எடுக்காமல் சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை.
கார் திருடப்பட்டதை அறிந்த சதீஷ்குமார் உடனே மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் கார் திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரை லீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அழகர்சாமி மீது ஏற்கனவே மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.