பெங்களூருவில் பிரஷாந்த் என்ற நபர் பரபரப்பான சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு டீ குடிப்பது போல ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் “இந்த வீடியோ எதுவும் பெரிய பிரச்சினையை உருவாக்கும் என்று எனக்கு தெரியாது, இனி சாலைகளில் ரீல்கள் எடுக்க மாட்டேன்” என்று பிரஷாந்த் உறுதியளித்தார்.
சரக்கு வண்டி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் இதற்குமுன் பல வீடியோக்கள் பதிவிட்டுள்ளார். இந்த செயல்களால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.