மதுரை அவனியாபுரத்தில், திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் இடத்தின் அருகே 2½ அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையை அதிமுகவினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக அவனியாபுரம் அருணகிரிநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜவகர் மகன் மணிமாறன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால், அவர்களையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.