தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது போதையில் பேருந்தை நிறுத்தி பேருந்திற்கு அடியில் சென்று மது பிரியர் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி, சுப்ரமணியபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் கொம்பையா. இவர் மது போதையில் கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பேருந்தை வழிமறித்து பேருந்திற்கு அடியில் சென்று அட்ராசிட்டில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவலர் பொன்ராஜ் , கொம்பையாவை பேருந்தின் அடியில் இருந்து வருமாறு வலியுறுத்தியும் அவர் வர மறுத்ததால், நீண்ட போராட்டத்திற்கு பின்பு பேருந்தினை அனுப்பி வைத்தார்.இதனை தொடர்ந்து கொம்பையாவை கைது செய்து, கிழக்கு காவல் நிலையத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.
