ரஷ்ய மதுபான ஆலை ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்ய பிராண்டான ரிவோர்ட் தயாரித்த இந்த பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்துடன் ஆன்லைனில் வெளியானதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
முன்னாள் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதியின் பேரனும் அரசியல்வாதியுமான சுபர்னோ சத்பதி, இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.