தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கிவிட்டன. தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகின்றனர்.
ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பிக்க முடியுமா?
அரசு விதிமுறைகளின்படி, குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை. ரேஷன் கார்டு இல்லாமல் நேரடியாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பயனாளி என்ற முறையில், ரேஷன் கார்டு அடிப்படையில் மட்டுமே பெண் தேர்வு செய்யப்படுகிறார். ஆதார் கார்டு இருந்தும் ரேஷன் கார்டு இல்லை என்றால் விண்ணப்பிக்க முடியாது.
நீங்கள் கொடுக்கும் ஆதார் எண், இந்த திட்டத்துக்காக கொடுக்கப்படும் உங்களின் வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு எண்ணில் இருக்கும் மொபைல் எண் தான்ஆதாரில் இடம்பெற்றிருக்க வேண்டும்.