2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை

25

மதுரை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் – நதியா தம்பதியினர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தனது குழந்தைகளாக ரக்ஷனா, மற்றும் தர்னிகாஸ்ரீ ஆகிய இருவரையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு நதியாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisement

தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு குழந்தைகள் கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.