அண்மைக்காலமாக மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இளைஞர்கள் பைக் கார்களை வைத்து சாகசம் செய்யும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் மதுரையில் இரவு நேரங்களில் அதிவேகமாக பைக்குகளில் சென்று அதனை ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.
சிறார்கள் இருவர் டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தை படாத பாடு படுத்தி அதனை படம் பிடித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாநகரின் கோரிப்பாளையம் பிரதான சாலைகளில் இரண்டு சிறார்கள் இரவில் டிவிஎஸ் எக்ஸெல் பைக்கில் ஜிம்னாஸ்டிக் செய்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைத்தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற சாலை விதிகளை மதிக்காமல் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் இளைஞர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.