மயிலாடுதுறை மாவட்டம் மகிமை ஆற்றில், சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் மகிமலை ஆறு அருகே, சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இந்நிலையில், கன மழை பெய்து வருவதால் விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்திருந்த நிலையில், சொகுசு கார் ஒன்று மகிமை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திட்டச்சேரி பகுதியை சேர்ந்த 5 பேர் வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், காருக்குள் இருந்தவர்களை அதிர்ஷ்டவசமாக அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
