21 வயது வக்கீலை கல்யாணம் செய்து கொண்ட 64 வயது சீரியல் கில்லர்! சிறையில் மலர்ந்த காதல்

100
Advertisement

France நாட்டை சேர்ந்த சார்லஸ் ஷோப்ராஜ் 2003ஆம் ஆண்டு, நேபாளத்தில் சுற்றுலாவிற்காக வந்த இரண்டு அமெரிக்க பெண்களை கொலை செய்ததற்காக 19 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்று வந்தார்.

பிக்கினி அணிந்த பெண்களை குறிவைத்து கொன்றதால் ‘Bikini Killer’ என்றும் அவ்வப்போது அடையாளங்களை மொத்தமாக மாற்றி தந்திரமாக தப்பித்து வந்ததால் ‘The Serpent’ எனவும் அழைக்கப்பட்டு வந்த சார்லஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

இத்தனை காலம் தண்டனை பெற்ற இவர் சிறையில் இருந்தபோதே எவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? சிறையில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவை என சார்லஸ் கேட்ட பட்சத்தில் உதவிய நிஹிதாவிற்கு பார்த்த கணத்தில் அவரின் மீது காதல் மலர்ந்து விட்டதாம். சார்லஸும் இதே போன்ற கருத்தை கூறிய நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இவர்கள் இருவரும் காதலில் விழுந்த  போது சார்லஸுக்கு 64 வயதும் நிஹிதாவுக்கு 21 வயதும் ஆனது.

Advertisement

சில வருடங்களுக்கு பிறகு சார்லஸின் சிறைத்தண்டனை மேலும் பல வருடங்களுக்கு தொடரும் என தெரிந்தும் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார் நிஹிதா.

சர்வதேச கொலைக்குற்றவாளியை கல்யாணம் செய்து பேசுபொருளாக மாறிய நிஹிதா பிஸ்வாஸ் ஒரு வழக்கறிஞர் ஆவார். இதனாலேயே பிரபலமான நிஹிதா, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்நிலையில், தற்போது 78வது வயதில் சார்லஸ் விடுதலை செய்யப்பட்டிருப்பதை பற்றி பேசிய நிஹிதா, இதற்காகவே இத்தனை காலம் போராடி வந்ததாகவும் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை முதலில் உறுதி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.