சுங்க கட்டணம் உயர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 சுங்கச் சாவடிகளில், நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களை பொறுத்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் விலைவாசி கடுமையாக உயரும் என்பவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான இந்த இரக்கமற்ற செயலை கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசை கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.