மலைப் பாம்புடன் மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமி

340
Advertisement

https://www.instagram.com/p/CSuS3klq4aZ/?utm_source=ig_web_copy_link

மிகப்பெரிய மலைப் பாம்புடன் அணுவளவும் அச்சமின்றி மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெரிய மலைப்பாம்பு சிறுமியை நோக்கி வருகிறது. அந்தச் சிறுமியும் சிறிதும் நன்கு பழக்கப்பட்ட செல்லப்பிராணியைப்போல் அந்த மலைப்பாம்பைத் தொட்டு விளையாடத் தொடங்குகிறாள்.

அங்கும் இங்கும் தாவித் தாவி தன்னுடைய தோழியோடு விளையாடுவதுபோல ஆனந்தமாக விளையாடுகிறாள். மலைப் பாம்பின் மீது படுத்து மகிழ்கிறாள்.

சமூக ஊடகத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் உள்ள சிறுமியின் பயமற்ற குணத்தைக்கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்தக் குழந்தை பயமின்றி பாம்புடன் விளையாடும் செயல் காண்போருக்கு ரசனையாக இருந்தாலும், அச்சத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தங்களின் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விபரீதச்செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குழந்தைகளை அறிவாளிகளாகவும் தைரியசாலிகளாகவும் வளர்ப்பதற்கு எத்தனையோ நற்செயல்கள் இருக்க உயிருக்கு ஆபத்து நிறைந்த இத்தகைய செயல்களில் ஏன் சிலர் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.