1000 கீலோமீட்டர் தனியாக பயணித்து எல்லையை அடைந்த உக்ரைன் சிறுவன்

346
Advertisement

உக்ரைனைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 1,000 கிலோமீட்டர் தூரம் தனியாகப் பயணம் செய்து எல்லையை அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கை மத்தியில் உக்ரைனை விட்டு 12 லச்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் வெளியேறி உள்ள நிலையில் , மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா ,தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

இந்நிலையில் , 11 வயதுடைய உக்ரைனை சேர்ந்த சிறுவன் ஒருவன் உக்ரைனின் , சபோரிஜியா நகரத்திலிருந்து – உக்ரைனின் எல்லை பகுதியான ஸ்லோவாக்கியாவுக்கு தனியாக பயணம் செய்துள்ளான் , சபோரிஜியாவில் தான் ரஷ்யப் படைகள் அணுசக்தி நிலையத்தை கடந்த வாரம் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சிறுவன் தனியாக பயணம் மேற்கொண்டதற்கான காரணம் தான் அனைவரையும் உறையவைத்து உள்ளது, நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பராமரித்து வந்த அந்த சிறுவன் , ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் தனது தாயிற்காக உதவி கோர , தனது உறவினர்களைக் கண்டுபிடிக்க 1,000 கிலோமீட்டர் ரயில் பயணத்தை மேற்கொண்டு உள்ளான் அந்த சிறுவன்.

ஸ்லோவாக் அரசு மற்றும் காவல்துறையிடம் சிறுவனின் தாய் வீடியோ பதிவின் மூலம் , தனது குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்நாட்டு அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி , அந்த சிறுவன் , தனது கையில் ஒரு பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தனியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

தனது தாயிற்காக , அசாதாரண சூழலில் தனியாகவும் துனிச்சலுடன் 1000 km பயணத்தை மேற்கொண்ட அந்த சிறுவன் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றான். மேலும் பத்திரமாக தன் உறவினர்களிடம் இணைந்தான் அந்த சிறுவன்.

பின் வீடியோ மூலம் சிறுவனின் தாய் அனுப்பிய செய்தியில் , ” உங்கள் சிறிய நாட்டில், சிறந்த இதயம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து எங்கள் உக்ரேனிய குழந்தைகளை காப்பாற்றுங்கள்” என்று வலியுறுத்தினார்.