இந்தியாவில் 28 மாநிலங்கள்மற்றும் 8 யுனியன் பிரதேசங்கள் உள்ளன. மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால் உலக அளவிலேயே நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 140 கோடி மக்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.
2024-2025 ஆண்டுகளின் தேசிய குற்ற பதிவகத்தின் (NCRB) மற்றும் பல தகவல்களின் படி, இந்தியாவில் அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் என்ன என்பதை இப்பொது பார்ப்போம்.
முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தின் குற்ற விகிதம் 7.4ஆக உள்ளது. இது மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் அதிகமான குற்றங்கள் பதிவாகும் மாநிலமாக உள்ளது. திருட்டு, தாக்குதல் மற்றும் சமுதாயம் சார்ந்த வன்முறைகள் போன்ற பலவகை சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேசம் உள்ளது. குற்ற விகிதம் 5.8 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அதிக குற்றம் நடக்கும் மாநில பட்டியலில் அருணாச்சல பிரதேசம் 2வது இடத்தில் உள்ளது.
3வது இடத்தில் ஜார்கண்ட் மாநிலம் உள்ளது. இங்கு குற்ற விகிதம் 5.3 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் 4 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
4வது இடத்தில் மேகாலயா உள்ளது. குற்ற விகிதம் 5.1 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
5வது இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. இங்கு குற்ற விகிதம் 5 ஆக உள்ளது.
6வது இடத்தில் அசாம் மாநிலம், 7வது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம், 8வது இடத்தில் ஹரியானா மாநிலமும் உள்ளன. அதிக குற்றம் நடக்கும் மாநில பாட்டியலை பொறுத்தவரையில் தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.