காதலர் தினத்தன்று மீண்டும் ரிலீஸ் ஆன EVERGREEN காதல் படங்கள்!

309
Advertisement

காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்து, காலத்தால் அழியாத classic காதல் படங்கள், தமிழக திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அப்படி re release பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்களை இப்பதிவில் பார்ப்போம்.

உலகம் முழுவதும் உண்மையான காதலுக்கு இலக்கணமாக பார்க்கப்படும் ‘டைட்டானிக்’ படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது 4K Dolby Atmos தரத்தில் மீண்டும் release செய்யப்பட்டுள்ளது. ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’ என்ற பாலிவுட் கிளாசிக் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பலரின் அபிமான கதாபாத்திரமாக மாறிப்போன ஜெஸ்ஸியை, தமிழ் சினிமாவிற்கு தந்த கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, மாதவனுக்கு chocolate boy பட்டத்தை வாங்கிக் கொடுத்த ‘மின்னலே’, காதலுக்கு புது அர்த்தம் கற்றுக்கொடுத்ததோடு தமிழர்களை மலையாள சினிமா பார்க்க வைத்த அல்போன்ஸ் புத்திரனின் ‘ப்ரேமம்’, வினீத் ஸ்ரீனிவாசனின் ‘ஹிரிதயம்’ மற்றும் பட்டி தொட்டியெங்கும் பேசுபொருளாக மாறிய பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ ஆகிய படங்கள் காதலர் தினத்தையொட்டி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.