IPS அதிகாரியான தனது தந்தைக்கு லிப்ஸ்டிக் பூசிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகக் காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாக இருக்கும் விஜய்குமார் என்னும் ஐபிஎஸ் அதிகாரிதான் அந்தப் பாசக்காரத் தந்தை.
மகள் நிலா தனக்கு லிப்ஸ்டிக் பூசும் வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐபிஎஸ் ஆபீஸர் விஜய்குமார். அதில் மகள்கள், குழந்தைகள் உலகிற்கு எல்லா மகிழ்ச்சியையும் தருகிறார்கள். என்னுடன் என் மகள் நிலா என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சிறுமி நிலா, தனது ஐபிஎஸ் தந்தை விஜய்குமாரின் உதடுகளுக்கு சாயம் பூசுகிறாள். சக பணியாளர்களிடம் அதிகார மிடுக்கையும், குற்றவாளிகளிடம் கடுமையையும் காண்பிக்கும் அந்த ஐபிஎஸ் அதிகாரி மகளின் பாசத்தில் தானும் ஒரு குழந்தையாக மாறி லிப்ஸ்டிக் பூசும்வரைப் பொறுமையாக அமர்ந்திருக்கிறார்.
அப்போது, தனது அப்பா ஒரு பொம்மைபோல இருப்பதாகக் கூறுகிறாள் சிறுமி நிலா. அப்பாவை மேலும் அழகாகக் காட்டுவதற்காக அவ்வாறு செய்வதாகக் கூறுகிறாள் நிலா. மகளின் பாசத்தில் உருகி பொம்மைபோலவே அமர்ந்திருக்கிறார் ஐபிஎஸ் தந்தை.
இந்தக் காட்சி தற்போது வலைத்தளங்களில் பரவி, அனைத்துப் பெற்றோரையும் கவர்ந்து வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், அனைத்து அப்பாக்களும் தங்கள் மகள்களுக்கு சூப்பர் ஹீரோக்கள்தான். நீங்கள் ஒரு மகளைப் பெற்றிருப்பது அதிர்ஷ்டம் என்று வர்ணித்து பதிவிட்டுள்ளனர்.