சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல் மீறுவது,சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது,
இந்நிலையில் சேலம், தர்மபுரியில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 11 மாதத்தில் 478 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.