போர் நிறுத்தம் காரணமாக, காசாவில் அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிரம்ப், காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளது. காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம் எனவும் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவோம் என குறிப்பிட்டார்.