கோவை வடவள்ளி அருகே உள்ள சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்து, அந்த தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது. இந்த தாக்குதல் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, வனத்துறையினர் மயக்க ஊசியுடன் சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை சிறுத்தை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.