Sunday, December 28, 2025

நீதிபதி நோக்கி ஷு வீசிய விவகாரம்- பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை மரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்த வழக்கறிஞர்கள் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தால் பூந்தமல்லியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related News

Latest News