பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹைதராபாத் பகுதியை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக அவர் பணியாற்றி வந்தார்.
இந்நிறுவனம், மகேஷ் பாபுவின் புகைப்படங்களை பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்றதாகவும், பலரை மோசடியில் ஈடுபடுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகினர். அதன் பேரில், சாய் சூர்யா டெவலப்பர்ஸ், அதன் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்தா மற்றும் மகேஷ் பாபு ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.