உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், சுமார் 31 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்படுகிறது என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினி கூறியுள்ளார்.
கும்பமேளாவிற்கு இவ்வளவு பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். கும்பமேளாவில் நடந்த கூட்டல் நெரிசல் சம்பவம் மிகப் பெரிய சம்பவம் கிடையாது. அது மிகைப்படுத்தப்படுகிறது எனக்கூறினார்.