கோலிவுட்டை கலக்கும் பெண் இயக்குநர்கள்

137
Advertisement

துறை சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்று வேலைக்கு செல்லும் பெண்களுக்கே எண்ணற்ற சிக்கல்களை உருவாக்கும் சமூகத்தில், சினிமா துறையில் தடம் பதிக்க துடிக்கும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு பஞ்சம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

எனினும், தடைகளை தாண்டி தங்கள் திறமைகளுக்கான தளத்தை உறுதி செய்யும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர்.

அப்படி தமிழ் சினிமாவில், தங்களுக்கான இடத்தை செதுக்கி வரும் சில பெண் இயக்குநர்களைப் பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

Advertisement

‘சில்லு கருப்பட்டி’ என்ற படத்தில் நான்கு இனிப்பான காதல் கதைகளை கூறி அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். யதார்த்தமாக கதைக்களத்தை நகர்த்தி செல்லும் இவரின் ரிலீசுக்கு காத்திருக்கும் அடுத்த படம் ‘கண்மணி’.

‘3’ படத்தை இயக்கிய பின், ரஜினிகாந்தின் மகள் என்பதை தாண்டி தனித்துவமான இயக்குநராக அடையாளம் காணப்பட்ட பெருமையை பெற்றவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதுவரை ஒரே ஒரு படம் மற்றும் சில இசை வீடியோக்களை இயக்கி இருந்தாலும், அதிலேயே தனது கலைத்திறமையை நிரூபித்த அவர், அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

‘இறுதிச்சுற்று’, ‘சூரரை போற்று’ மற்றும் ‘பாவக்கதைகள்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய சுதா கொங்கரா, தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தனது கணவரோடு இணைந்து ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய காயத்ரி புஷ்கர், அதே படத்தை ஹிந்தியில் தனியாக இயக்கி வருகிறார்.

கலகலப்பான ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி, ‘காளி’ படத்தில் ஆழமான கதைக்கருவை லாவகமாக கையாண்டு கவனம் ஈர்த்தார். சிறிய இடைவெளிக்கு பின், இவர் இயக்கியுள்ள பேப்பர் ராக்கெட் எனும் வெப் சீரிஸின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் பல கலைத்திறன் கொண்ட பெண்களின் கேமராக்களின் வழியே தொடர்ந்து பல கண்களுக்கு சினிமா இன்னும் அழகாக தெரிந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.